கம்பம் கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்ற சென்றவர் பலி

85பார்த்தது
கம்பம் அருகே கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்ற சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி போலீசார் விசாரணை

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க. புதுப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் முருகேஸ்வரி. இவருக்கும் இவரது கணவர் சின்ன மொக்கைக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததால் முருகேஸ்வரி இரட்டைப்புளி சாலையில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்ற முருகேஸ்வரியின் வீட்டருகே குடியிருக்கும் பரத் என்பவர் கிணற்றில் காப்பாற்ற முயற்சி செய்தபோது பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்த கம்பம் தீயணைப்புத் துறையினர் ஈஸ்வரியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கி பலியான பரத் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி