உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் சூரிய திலகவதி தலைமையிலான போலீசார் கூடலூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது துர்க்கை அம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த சிவனேசன் என்பவரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சிவனேசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.