தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் போலீஸாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் வழக்குரைஞர்கள் சங்கம் சார் பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டுக் குழுவின் மாநில துணைத் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். உத்தமபாளையம் பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.