கண்ணை கோவில் திருவிழா முன்னேற்பாடு பணிகள்

81பார்த்தது
தமிழக கேரள எல்லையில் தேக்கடி பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகிகோவில் இந்த திருகோவிலில் ஆண்டு தோறும் சித்திரா பௌர்ணமி அன்று மங்கலதேவி கண்ணகிகோவிலில் சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெறும்.

இந்த கோவில் விழாவிற்காக கண்ணகி கோவிலுக்கு செல்வதற்கு தமிழகபகுதியான பளியன்குடி மலைப்பாதை வழியாக 6 கிமீ நடைபயணமாக செல்லவேண்டும்.
அல்லது கேரள வழியாக குமுளியில் இருந்து ஜீப் மூலம் 12 கிமீ அடர்ந்த வனப் பகுதியில் பயணம் செய்யவேண்டும். தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கண்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.

எல்லையில் உள்ள இந்த அடர்ந்த வனப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் இத்திருவிழாவின் முன் ஏற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தமிழகம் மற்றும் கேரள மாநில அதிகாரிகள் இணைந்து நடத்தினார்கள்.

இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி திருவிழா நடைபெறுவதை தொடர்ந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் மற்றும் தேனிமாவட்ட ஆட்சியர் ஷஜீவனா ஆகியோர் தலைமையில் திருவிழா முன் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள ராஜிவ் காந்தி கலை அரங்கத்தில் நடத்தினார்கள்