தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்கும் கம்பம் மெட்டு மழைச்சாலையானது ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேனியிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் கம்பம் புறவழிச்சாலை வழியாக கம்பம்மெட்டு, ஆமையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், முன்டக்காயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லவேண்டும்.
கேரளாவிலிருந்து ஐயப்பன் கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி, கூடலுார், கம்பம், சின்னமனூர் வழியாக தேனி திரும்பி வரவேண்டும். மேற்கண்ட போக்குவரத்து வழித்தட மாற்றத்தினை ஒழுங்குபடுத்தும் பொருட்டு பக்தர்களின் வாகனங்களுக்கு வழித்தடம் மற்றும் தகவல்கள் தெரிவிப்பதற்காக தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து முக்கியமான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்கள் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.