தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கம்பம் நகர் தலைமை வழக்கறிஞர் அணி தலைமை சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி கலந்து கொண்டு உரையாற்றினார். மாவட்ட, நகர், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்