கம்பம் அருகே அரசு பேருந்து சிறை பிடிப்பு

59பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் அருகே புதுப்பட்டியில் அரசு பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்து பயணியை இறக்கி விடவில்லை என்று குற்றம் சாட்டி அரசுப் பேருந்தை சுமார் ஒரு மணி நேரமாக பொதுமக்கள் சிறைப்பிடித்து ஓட்டுநர் இடமும் நடத்துனர் இடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திண்டுக்கல், கோட்டையம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலையில் வாகனங்கள் நகராமல் அங்கே நின்றது.

கோயம்புத்தூர் ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்திலிருந்து கம்பம் வழியாக குமுளி வரை செல்லும் பேருந்தில் கல்லூரி மாணவி பயணம் செய்துள்ளார், அவர் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தன்னை இறக்கி விடுமாறு கூறியுள்ளார், அதற்கு நடத்தினர் புதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தமில்லை கம்பம் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து கல்லூரி மாணவி செல்போனில் தனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலைத் தொடர்ந்து பெற்றோர்களும் உறவினர்களும் நெடுஞ்சாலையில் வந்த பேருந்தை வழிமறித்து சிறை பிடித்தனர்.

தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் அனுப்பி வைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி