தேவாரம் பேரூராட்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேவாரம் பேரூராட்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வைகை ஐ கேர் இணைந்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். முகாமினை தேவாரம் பேரூராட்சி தலைவர் லட்சுமி பால்பாண்டி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.