கம்பம் நகரில் கொலை முயற்சி; குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை

71பார்த்தது
கம்பம் நகரில் கொலை முயற்சி; குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை
தேனி மாவட்டம் கம்பம் நகரை சேர்ந்த சிவகுமாருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சதீஷ்குமார் என்பவர் சிவக்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இது குறித்த வழக்கில் 2015ஆம் ஆண்டு சதீஷ்குமாரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை உத்தமபாளையம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக குற்றவாளி சதீஷ்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி