தேனி மாவட்டம் கம்பம் சாமண்டிபுரத்தில் இருந்து மஞ்சள்குளம் செல்லும் சாலையில் கம்பம் தெற்கு போலீசார் வாகன சோதனையின் போது டூவீலரில் கஞ்சாவை கடத்தி வந்த பிரதாப், பிரதீப் என்ற இரண்டு ஆண்கள், சாந்தி, வண்ணக்கிளி என்ற இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்களை கைது செய்த கம்பம் போலீசார் அவர்களிடமிருந்த டூவீலர், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்