தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியார் அணையின் பாதுகாப்பு குறித்து அணை பாதுகாப்புச் சட்டத்தின் படி மத்திய அரசின் சார்பாக முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குழுவில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அணில் ஜெயின் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத் துறையின் கூடுதல் செயலாளர் கேரள நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் உட்பட ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.
இந்தக் குழுவினர் முதல்முறையாக நாளை அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இந்தக் குழுவில் கேரளாவைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலர் விசுவாஸ் தலைமை பொறியாளர் பிரியேஷ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
கேரளா அதிகாரிகளை முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவில் இணைத்துள்ளதை கண்டித்தும் அவர்களை நீக்கக்கோரியும்
வலியுறுத்தி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் வணிகர் சங்கத்தினர் தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள கூடலூர் லோயர் கேம்பில் எல்கையினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குமுளிக்கு செல்ல இருந்த விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது