சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம்

83பார்த்தது
கம்பம் அருகே சுருளி அருவியில் உலா வரும் காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது.

ஆன்மீகத் தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் உள்ள இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்

கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று அருவியில் நீராடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே அருவிக்கு வர தொடங்கினார்கள்.

இந்நிலையில் ஒற்றைக்காட்டு யானை ஒன்று அருவியின் அருகே உலா வந்து தஞ்சம் அடைந்திருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

மேலும் ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்கு இடம்பெற செய்வதற்காக வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி