கூடலூர் அருகே மான் வேட்டை ஒருவர் கைது

83பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட சுருங்கனார் காப்புக்காட்டு அடர்ந்த வனப் பகுதியாகும் இங்கு ஏராளமான வன உயிரினங்களில் இருப்பிடமாக உள்ளது.

இந்த வனப்பகுதியில் மான்கள் வேட்டையாடுவதாக கம்பம் மேற்கு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலினை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனப் பகுதியில் இருந்து கூடலூருக்கு வரும் வனச்சாலையில் தொட்டி பாலம் அருகே சந்தேகப்படும் படியாக வந்த மேலக்கூடலூர் ராஜபிரபு என்பவரை சோதனை செய்ததில் அவர் மிலா மானை வேட்டையாடி இறைச்சியாக கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து மானின் இறைச்சியை கைப்பற்றிய போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த வேட்டையாடுதல் சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர் பொறுப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் சமூக விரோதிகள் வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்வது வருவதாகவும், வன குற்றங்களில் ஈடுபடும் நபர் மீது வனத்துறையினர் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஒரு நபரை மட்டும் கைது செய்த வனத்துறையினர், தப்பி ஓடி தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி