கம்பம் உடல் நலக்குறைவால் தம்பதிகள் தற்கொலை

83பார்த்தது
கம்பம் உடல் நலக்குறைவால் தம்பதிகள் தற்கொலை
தேனி மாவட்டம் கம்பம் கம்பம் நகரில் இருந்து கோம்பை செல்லும் சாலையைச் சேர்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவர் தீபிகா என்பவரை (30) கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜுக்கும், தீபிகாவுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த தம்பதியினர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதனை அருகில் இருந்த உறவினர்கள் இரண்டு பேரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் கொண்டு செல்லும் வழியில் மனோஜ் உயிரிழந்தனர்.
அவரது மனைவி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார் இந்த சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி