தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அப்பிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரிச்சப்பட்டி கிராமம் உள்ளது. அந்த பகுதியில் வாழை சாகுபடியில் ஊடுபயிராக தென்னை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுபற்றி விவசாயிகளிடம் கேட்ட போது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முடியும், மேலும் ஒருமுறை நீர் பாய்ச்சினால் இரண்டு விவசாயத்திற்கும் பயன்படும் என்று கூறினார்கள். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் போகும் போது இந்த ஊடுபயிர் சாகுபடி கைகொடுக்கும். அதனால் தான் இதனை செய்துள்ளோம் என மகிழ்ச்சியுடன் கூறினர்.