தேனி மாவட்டம் குச்சனூரில் இயேசுவின் அன்பு பொது வாழ்வு திருச்சபை நடத்திய கிறிஸ்மஸ் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. திருச்சபை ஜெப ஊழியர் ரத்தினம் பிரபு தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா ஜெப கூட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் குழந்தைகள் நடனமாடி மகிழ்வித்தனர். இதில் குச்சனூர் பொதுவாழ்வு திருச்சபை ஜெப ஊழியர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.