கம்பம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட குழந்தை பாதுகாப்பு சமூக பணியாளர் வனராஜன் முன்னிலை வகித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்து பேசினார்.
இதில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பணிகள், குழந்தைகள் குற்றசம்பவங்கள் குறித்து கண்காணிப்பது, செல்போன் பயன்பாடு கண்காணிப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் பாதிப்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் தொல்லைகள், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள், பள்ளிகளுக்கு அருகே போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்ப்பது, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சம்பந்தமாக தெரிவிக்க வேண்டிய போன் எண்கள், பெற்றோரை இழந்தவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மீனாட்சி சுந்தரம், சுகாதார அலுவலர் அரசகுமார், தன்னார்வலர்கள் வின்னர் அலீம், வேல் பாண்டியன், கவுன்சிலர்கள் அன்புகுமாரி, அபிராமி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.