தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பு பெண்கள் கல்வியில் முன்னேற்றம் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கிராம அலுவலர் பிரபு, சமூகப் பணியாளர் வனராஜ் வள்ளிநாயகம், பொதுமக்கள் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.