தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை திருக்காளத்தீஸ்வரர் கோவிலில் மாசித் தேரோட்டம் திருவிழாவினை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஒன்றாம் தேதி
திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கினார்கள்.
விழாவில் திருக்கல்யாணம் விழாவினை தொடர்ந்து
இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் ஊர்வலத்தினை
வெகு விமரிசையாக
நடத்தினார்கள்.
மஞ்சள் நிறபட்டு உடுத்தி திருக்காளத்தீஸ்வரர் உடன் திருத்தேரில் எழுந்தருளிய ஞானாம்பிகை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் சிவ வாத்தியங்கள் முழங்க நமசிவாய நாமம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து சென்றனர்.
நிலையில் இருந்து புறப்பட்ட திருத்தேர், உத்தமபாளையம் பேருந்து நிலையம் வழியாக மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு என 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக திருத்தேரினை இழுத்துச் சென்றனர்.
இந்த திருத்தேரோட்டத்தில் உத்தமபாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.