உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரை உடைந்து வெள்ள நீர் விலை நிலங்களுக்கு சென்றது தகவல் அறிந்து உடைப்பை சரி செய்யும் பொதுப்பணித்துறையினர்
முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது, மேலும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்தால் மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி வெல்லமாக முல்லைப் பெரியாரின் கலக்கின்றது. மேலும் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவியிலிருந்து வரும் வெள்ளநீர் முல்லைப் பெரியாற்றில் கலந்து ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் இருந்து வரும் வெள்ள நீர் அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு சென்றது, விவசாயிகள் உடனடியாக உத்தமபாளையம் வடிநிலக் கோட்டம் உதவி பொறியாளர் மயில்வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு பொக்லைன் இயந்திரம் உடனடியாக வரவழைக்கப்பட்டு, மணல் மூடைகள் அடிக்கி கரை உடைப்பை சரி செய்ததால், பல லட்ச ரூபாய் செலவு செய்து விவசாயிகள் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகாமல் பாதுகாக்கப்பட்டது