சின்னமனூர் அரசு அனுமதியின்றி வண்டல் மண் கடத்தல்

73பார்த்தது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கருவேலம் குளம் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த கண்மாய் மூலம் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன, இப்பகுதியில் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு இந்த கண்மாய் காரணமாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நீரோடையில் இருந்து கருவேலகுளத்துக்கு தண்ணீர் வருகிறது.
கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்படி மஞ்சளாறு வடிநில கோட்டத்திற்கு சொந்தமான இந்த குளத்தை தூர்வாரும் நோக்கத்தோடு விவசாய பயன்பாட்டிற்காக விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியது. குளங்களில் மேடான பகுதிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டது.
விவசாய நிலங்களுக்கு அனுமதி பெற்று வணிக நோக்கத்தோடு ரியல் எஸ்டேட், காலிமனையிடங்களில் தளங்களை உயர்த்துவதற்கும், செங்கல் சூளைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
விவசாயிகளின் பெயரில் தனி நபர்கள் ஆளுங்க கட்சியின் நிர்வாகிகள் கண்மாயில் பொக்லைன் உதவியுடன் 6 அடி ஆளத்திற்கு மேல் வண்டல் மண்ணை அள்ளி விற்பனை செய்துள்ளனர்.
கண்மாயில் பல இடங்களில் ஆய்வுக்காக தோண்டப்பட்ட பள்ளம் போல் காட்சியளிக்கின்றன.
கலெக்டர், கனிமவளத்துறை அதிகாரிகள் கண்மாயில் ஆய்வு செய்து விதிகளை மீறி வண்டல் மண் அள்ளிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூர்வாரி தண்ணீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி