தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசநாயக்கனூர், கரிச்சப்பட்டி கண்மாயில் விவசாயிகள் தங்கள் ந
ிலங்களை பயன்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை மூலம் அனுமதி சீட்டு வழங்கி வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் குளத்து மண்ணை புரோக்கர் மூலமாக விவசாய பயன்பாட்டிற்கு செல்ல விடாமல் காளவாசல் மற்றும் வீட்டு மனைக்கு விற்பனைக்காக கண்மாயில் டிப்பர்கள் மூலம் அள்ளி விற்பனை செய்து அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.