பெரியார் நீர் வரத்து வாய்க்காலில் தவறி விழுந்த காட்டு யானை

74பார்த்தது
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு நீர் ஆதாரமாகும் விவசாய பாசன ஆதாரமாகவும் திகழ்கின்றது.

இந்த அணையில் இருந்து வரத்து வாய்க்கால் அமைத்து ராட்சச குழாய்களின் மூலம் தமிழகத்திற்கு தண்ணீரினை கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வரத்து வாய்க்காலை கடக்க முயன்ற யானை ஒன்று தண்ணீரில் விழுந்து அணை திறக்கும் சட்டப் பகுதியில் தேங்கிய தண்ணீரில் உயிருக்கு போராடியது

உடனடியாக தகவல் அறிந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்

இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தமிழக பகுதிக்கு செல்லும் தண்ணீரின் வேகத்தை குறைப்பதற்காக ஷட்டர் பகுதியை முழுமையாக அடைத்தனர்.

இதனால் தண்ணீர் வேகம் குறைந்தது , சுதாரித்துக் கொண்ட யானை நீர் வரத்து வாய்க்காலில் இருந்து பாதுகாப்பாக கரையேறி வனப்பகுதிக்கு சென்றது.

காட்டு யானைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் துரிதமாக செயல்பட்ட வனத்துறை அதிகாரிகளையும் தமிழக பொதுப்பணித்துறையினரையும் அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி