தேனி அருகே முதலில் வந்த மாட்டுக்கு பரிவட்டம் கட்டிய கிராமத்தினர்
தேனி மாவட்டம் போடி தொகுதிக்கு உட்பட்ட தப்புகுண்டு கிராமத்தில் நரசிங்க பெருமாள் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஐந்து கிராமங்களுக்கு ஒரு மாட்டு தொழுவத்திலிருந்து தம்ரான் மாடுகள் வழங்கப்பட்டு மாட்டு ஓட்டம் நடைபெற்றது. இந்த மாற்று ஓட்டத்தில் முதலில் வந்த தம்புரான் மாடுக்கு கிராமத்தின் சார்பாக பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை செய்யப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்