தேனி மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் நடைபெறும் மேம்பாலம் பணிக்காக போக்குவரத்தினை மாற்றம் செய்துள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காரணத்தினால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.