நவீன ஆவின் பாலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

877பார்த்தது
நவீன ஆவின் பாலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோதங்கராஜ் அவர்கள் தேனி மாவட்டம், கோட்டூர் பகுதியில் ரூ. 60 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை திறந்து வைத்து, தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ. 3. 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் மற்றும் பால் வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் நிர்வாக இயக்குநர் திரு. எஸ். வினித், இ. ஆ. ப. , அவர்கள் முன்னிலையில் இன்று (07. 10. 2023) துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. கே. எஸ். சரவணக்குமார் (பெரியகுளம்) அவர்கள் திரு. ஆ. மகாராஜன் (ஆண்டிபட்டி) அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தங்கதமிழ்செல்வன், திரு. லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோட்டூர் பகுதியில் ரூ. 60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன பாலகத்தில் தேவையான குளிரூட்டும் கருவிகள், பன்னீர் தயாரிக்கும் இயந்திரம், பாதாம் பொடி தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களும், ஆவின் நெய், வெண்நெய், பால்கோவா, ஐஸ்கிரிம், நறுமண பால், தயிர், மோர், மற்றும் பால்பவுடர் போன்ற பொருட்களின் தரம்குறித்து ஆய்வு செய்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி