தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட குமுளி பேருந்து நிலையத்தில் ரூபாய் 5. 50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்துடன் கூடிய பணிமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை, போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கே. பணிந்திர ரெட்டி அவர்கள், மாவட்ட கலெக்டர் திருமதி ஆர். வி. ஷஜீவனா அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் திரு. ஆறுமுகம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று ஆய்வு நடைபெற்றது.