தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் 27வது பகுதி அருள்மிகு ஸ்ரீ கொம்பன் காளியம்மன் கோவில் ஜீரோணதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 19-08-2024 அன்று திங்கட்கிழமை காலை 9. 15 மணிக்கு மேல் 10. 15 மணிக்குள் வெகுவிமர்சியாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 11. மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது. அது சமயம் 27 வது பகுதி பொதுமக்களும் பெரியோர்களும், விழா கமிட்டியாளர்களும் திரளாக கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவினை சிறப்பித்து அம்மனின் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்.