தேனி மாவட்டம்
18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா இ. ஆ. ப. , அவர்கள் தகவல். தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 10. 00 மணி முதல் மதியம் 1. 00 மணி வரை 10. 10. 2023 முதல் 20. 10. 2023 வரை 8 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
இச்சிறப்பு மருத்துவ முகாம்கள் 10. 10. 2023 அன்று தேனி பி. சி. கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11. 10. 2023 அன்று ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 12. 10. 2023 அன்று போடிநாயக்கனூர் ஜ. கா. நி. மேல்நிலைப் பள்ளியிலும், 13. 10. 2023 அன்று சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி (காலனி), 17. 10. 2023 அன்று உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், 18. 10. 2023 அன்று கம்பம் அரசு கள்ளர் துவக்கப் பள்ளியிலும் (உத்தமபுரம்), 19. 10. 2023 அன்று பெரியகுளம் எட்வர்ட் நினைவு நடுநிலைப் பள்ளியிலும், 20. 10. 2023 அன்று மயிலாடும்பாறை ஜி. ஆர். வி. மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 8 நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.