போடிநாயக்கனூரில் த. வெ. க மகளிர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக வெற்றி கழகம் தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போடி பகுதியை சேர்ந்த பல்வேறு பெண்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக கையெழுத்திட்டனர். கையெழுத்திடத் தெரியாத மூதாட்டிகள் பலர் தங்கள் கைரேகையை பதிவிட்டனர்