தேனி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி, 10-வது வார்டு, டெலிபோன் நகர் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாக்கடையில் இருந்து கழிவு நீர் நிரம்பி தெருக்களில் ஓடுவதால் அப்பகுதியில் வீரியம் மிகுந்த கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் சூழல். அப்பகுதி மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.