தேனி மாவட்டம், போடி நகராட்சி 10 வது வார்டு பள்ளியில்நடைபெற்ற பள்ளி மேலாண்மைகுழு கட்டமைப்பில் தேனி கலெக்டர் சஜீவனா கலந்து கொண்டார். தேனி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களாக வட்டார கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி போடிநாயக்கனூர் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மறு கட்டமைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.