போடிநாயக்கனூர் அருகே சாலை மறியல்

4269பார்த்தது
போடிநாயக்கனூர் அருகே சாலை மறியல்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ளது மேல சொக்கநாதபுரம். இங்கு வசித்து வருபவர் முத்து கோணப்பன் (22). இவர் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. மேல சொக்கநாதபுரம் அருகில் உள்ள உணவு விடுதியில் உணவு அருந்தி கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் உள்ள மற்றொரு தரப்பைச் சார்ந்த பத்து நபர்கள் இவரிடம் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும், வாய் தகராறு முற்றிய நிலையில் முத்துக்கோணப்பனை தாக்கிய 10 நபர்களில் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துக்கோணப்பனை முதுகிலும் மற்றும் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த முத்து கோனப்பன் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்ததை கண்டு அப்பகுதியில் உள்ள நபர்கள் உடனடியாக அவரை கோடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 10 நபர்களையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உறவினர்களும் மேல சொக்கநாதபுரம் கிராம பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போடி சரக துணை கண்காணிப்பாளர் பெரியசாமி மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி