போடிநாயக்கனூரில் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கல்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஹாக்கி போட்டிகள் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் போடி வெஸ்ட் மவுண்டன் அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு போடி முன்னாள் எம்எல்ஏ லெட்சுமணன் கோப்பையையும், பரிசுகளை வழங்கினார். இதில் திமுக இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.