தேனி என் ஆர். டி நகர் பகுதியில் அமைந்துள்ள சிவ கணேச கந்த பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நவராத்திரி விழாவில் 3-ம் நாளான நேற்று(அக். 05) கோயிலில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ அஷ்ட புஜ துர்காம்பிகை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்பிகை திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.