சின்னமனூரில் தியாகி இமானுவேல் சேகரனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம், சின்னமனூரில் தேவேந்திர குல வேளாளா் அமைப்பு மற்றும் அறக்கட்டளை சாா்பில் தியாகி இமானுவேல் சேகரனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில், இந்த சமுதாய அமைப்பினா் தியாகி இமானுவேல் சேகரனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட பொருள்கள் கொடுக்கப்பட்டன. மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தியாகி இமானுவேல் சேகரனாா் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள், தேவேந்திர குல வேளாளா் அமைப்பினா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.