தேனி மாவட்டம் போடி சட்டமன்றத்துக்கு உட்பட்ட பூதிப்புரம் அருகே மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது வீட்டின் உள்ளே அதிகாலை சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது ரெங்கநாதன் என்பவர் வீட்டில் இருந்த செல்போனை திருட முயற்சி செய்ததால் கையும் களவுமாக பிடித்த ராஜேஷ் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். திருட்டு குறித்து ரெங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.