போடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், போடி நகர் காவல் நிலைய போலீசார் பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த போடி முத்துப்பாண்டி தெருவைச் சேர்ந்த தசரதனை (41) பிடித்து விசாரித்தனர். அவர் புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.