தேனியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இமானுவேல் சேகரன் 99 வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது. இமானுவேல் சேகரன் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.