தேனி அருகே திமுக பாக முகவர்கள் கூட்டம்

56பார்த்தது
தேனி அருகே திமுக பாக முகவர்கள் கூட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு பகுதி, பாகம் முழுதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை வலுப்படுத்தும் செயல்முறையை முன்னெடுத்துள்ள திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணி ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியக் கழகத்திற்குட்பட்ட பாகமுகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் முத்துக்குமார் தலைமையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

கடமலை மயிலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஓ. சுப்பிரமணியன் மற்றும் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தங்கப்பாண்டி ஆகியோரின் முன்னிலை வகித்தனர். திமுக நிர்வாகிகள், பாகமுகவர்கள், கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி