தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது நெல்லுகுத்தி பகுதியில் சுல்தான் இப்ராஹிம் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சுல்தான் இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.