தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கிருஷ்ணா நகரில் தனியார் மதுபார் அமைக்க உள்ளதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். போடி நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் சதாசிவம் செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, மகளிர் அணி தலைவி கிருஷ்ணவேணி, போடி நகர் தலைவர் முசாக் மந்திரி, வட்டாரத் தலைவர் ஜம்பு சுதாகர், மாநிலச் செயலாளர் வினோத் குமார் நகர் செயலாளர் ராகேஷ் உட்பட அப்பகுதி பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்