சின்னமனூர் பொங்கல் கரும்பு தோட்டங்களில் தரம், அளவு குறித்து கலெக்டர் ஆய்வுதேனி மாவட்டம், சின்னமனூரில் தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள கரும்பின் தரம் மற்றும் அளவு குறித்து கரும்புத் தோட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வில் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், உதவி இயக்குநர் (வேளாண்மை) சின்னமனூர் அஜ்மல்கான் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.