தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி போடிநாயக்கனூர் நகராட்சி அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு கூட்டம் நேற்று (டிச. 31) காலை போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.