போடி தாலுகா கீழ சொக்கநாதபுரம் பகுதி சேர்ந்த முருகன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா மற்றும் ஈஸ்வரன் ஆகியோருக்கும் இட பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று வீட்டின் அருகே நின்று இருந்த முருகனை, ஈஸ்வரன் பாப்பையா இருவரும் தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கீறி உள்ளனர். இது குறித்து முருகன் போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்