தேனி மாவட்டம் கம்பம் கம்பராய பெருமாள், காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் பிரதோஷத்தை ( முன்னிட்டுகம்பராய பெருமாள் திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர். சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், நெய், பன்னீர், பழங்கள், திருநீறு, இளநீர், சீ திருமஞ்சன பொடி, போன்ற அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குரு பெயர்ச்சி பலன்கள் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. சொற்பொழிவாளர் மோகனவேலுகுரு பெயர்ச்சி பலன்கள்பற்றி சொற்பொழிவு ஆற்றினார். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், ஆகியராசிக்காரர்கள்மற்றும் நட்சத்திரங்கள்கொண்ட மெயன்பர்களுக்கு நன்மை மற்றும் தாக்கம் பரிகாரம் போன்றவற்றைசிறப்புரையாற்றினார். கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். சிறப்பாக சொற்பொழிவு ஆற்றிய சொற்பொழிவாளர் மோகனவேலு அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.