சாலையில் இறந்து கிடந்த நாயை அடக்கம் செய்த சமூக ஆர்வலர்

55பார்த்தது
சாலையில் இறந்து கிடந்த நாயை அடக்கம் செய்த சமூக ஆர்வலர்
சாலையில் இறந்த கிடந்த நாயால் பொது மக்கள் பாதிப்பு
அப்புறப்படுத்திய சமூக ஆர்வலர். ஜூலை 11-
தேனி-மதுரை செல்லும் சாலையில் க. விலக்கு அருகே நாய் ஒன்று துர்நாற்றம் வீசிய நிலையில் இறந்து கிடந்தது. ஊராட்சி துப்புரவு பணியாளர்களும் அப்புறப்படுத்தவில்லை. இது குறித்து அந்த வழியாகச் சென்ற சமூக ஆர்வலரும் ம. சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநருமான ரஞ்சித்குமார் தானே முன் நின்று அனைவருக்கும் இடையூறாக கிடந்த இறந்த நாயை மண்வெட்டியால் குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினார். அப்பகுதியில் துர்நாற்றம் வீசாதபடி இடத்தை துப்புரவு செய்தார். பொதுமக்கள் சமூக ஆர்வலரை பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி