கம்பம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கோம்பை செல்லும் சாலையில் உத்தமபாளையம் சிறப்பு சார்பு ஆய்வாளர் நாட்ராயன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கம்பம் உலக தேவர் தெருவை சேர்ந்த அழகு தேவர் மகன் பாண்டி, புதுப்பட்டி இருப்பு வாய்க்கால் தெருவை சேர்ந்த சேகர் மகன் கௌதம், கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்த ராமர் மகன் கார்த்திக் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சூரியன் ஆகியோர் சட்டவிரோதமாக சுயலாபத்திற்காக 12 கிலோ கஞ்சாவை வாகனங்களில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சட்டவிரோதமாக வாகனங்களில் கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 12 கிலோ கஞ்சா ரொக்க பணம் 18, 900 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்