முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், நேற்று வினாடிக்கு 5, 339 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3, 265 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131. 15 அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1355 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 4, 966 மில்லியன் கன அடியாக உள்ளது.