ஆண்டிபட்டி, எஸ். எஸ். புரம் பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆண்டிபட்டி போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த தினேஷ்குமார், அருண்குமார் ஆகியோரிடம் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.